Friday, December 25, 2009

சிங்கப்பூரில் கிருஸ்துமஸ் ஒளி அலங்காரங்கள் மிக பிரபலம். இநத ஒளி அலங்காரங்களை பார்க்க செல்லும்போது சில எதிர்பாராத அருமையான நிகழ்ச்சிகளை பார்க்கும் வாய்ப்பும் கிட்டும்.ஸ்ட்ரீட் பர்ஃபார்மன்ஸஸ் மற்றும் வணிக வளாகங்கள் ஏற்பாடு செய்யும் பல் சுவை நிகழ்ச்சிகள் இதில் அடங்கும்.அப்படி ஒரு வணிக வளாகத்தில் பார்த்த நிகழ்ச்சியின் க்ளிப்பிங்குகள் கீழே. சாண்டா க்ளாஸ் தாத்தா பரிசுகளை கொடுப்பதற்காக மான்கள் பூட்டிய வண்டியில் செல்வாராம். சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டில் இந்த வருட கிருஸ்துமஸ் அலங்காரங்களில் இந்த மான்களுக்குத்தான் முக்கியத்துவம். விதவிதமான மான் முக பெண் பொம்மைகள். எல்லா வருடங்களையும் போல் ஒளி அலங்காரங்கள் மிகவும் அருமை.கிருஸ்துமஸுக்கு முந்தைய இரவு குடும்பத்துடன் வீதி வலம் சென்றோம். புரட்டாசி சனிக்கிழமையில் திருப்பதிக்கு போன ஃபீலிங். அத்தனை கூட்டம். என்ன ஒன்று, "ஏடு கொண்டல வாடா கோவிந்தா“ தான் மிஸ்ஸிங். இந்த வருடம் கூடுதல் சிறப்பு, மெரீனா பே பகுதிகளிலும் "Glitzy Christmas By the Bay" என்ற தீமில் ஓளி அலங்காரங்கள். விதம் விதமான கிருஸ்துமஸ் மரங்கள்.

Thursday, September 3, 2009



ஆப்பிள்: கொஞ்ச நாளாவே எனக்கும் அந்த ஆசை வந்திருச்சு. அவியல், கிச்சடி, குவியல்,கலவை, காக்டெயில்,பஞ்சாமிர்தம், கொத்து பரோட்டா, ஊறுகாய் அப்படின்னு ஆளுக்கொன்னா குட்டி குட்டி விஷயமா கலந்து கட்டி அடிக்கறாங்களே, நம்மளும் ஒண்ணும் இப்படி போட்டா நல்லா இருக்குமேன்னு (அட, எனக்குதாங்க) தோணிக்கிட்டே இருந்துது. ஆனா என்ன பேரு வைக்கறதுன்னு யோசிச்சு தலைய சொறிஞ்சு சொறிஞ்சே ஆறு மாசம் ஓடிப் போச்சு.

கொஞ்ச நாள் முன்னாடி கதம்பம்னு வைக்கலாம்னு முடிவே பண்ணிட்டேன்.எதுக்கும் இருக்கட்டும்னு கூகிள்ல போயி "கதம்பம்"னு தேடிப் பாத்ததுலதான் தெரிஞ்சுது, அண்ணாச்சி வடகரை வேலன் ஏற்கெனவே அத காப்பிரைட் வாங்கிட்டாருன்னு.

குப்பை, கசக்கிய காகிதங்கள் அவ்வளவு ஏன் சாக்கடை, வாந்தி அப்படின்லாம் கூட தோணிச்சு. யாராவது ஒருத்தரை பத்தி எழுதிப்புட்டு, "உங்களை பத்தி இந்த வாரம் குப்பைல எழுதிருக்கேன்" அப்படின்னா சொல்ல முடியும்?

ரெண்டு நாள் முன்னாடி டிவில சமையல் நிகழ்ச்சியில் சாலட் செய்வதை பார்த்ததும் கப்புன்னு புடிச்சிகிட்டேன். நான் இதுவரைக்கும் தேடுனதுல வேற யாரும் இந்த பேர்ல கலப்படம் பண்றதா தெரியல. உங்களுக்கு யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க மாத்திருவோம்.
-------------------------------------------------------------------------------------

அன்னாசி: பதிவுலக நண்பர் ஒருவரிடம் முதலில் பின்னூட்டங்கள் மூலமாக, அப்புறம் மின்னஞ்சல் பின்னர் ஃபோன் என்று கொஞ்சம் கொஞ்சமாக நட்பு வளர்ந்து சென்ற வாரக் கடைசியில் நேரிலேயே சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.அந்த பதிவர் யாருன்னு கேக்கறீங்களா?

இவருடைய பதிவின் பெயரிலேயே தமிழில் ஒரு பத்திரிக்கையும் உண்டு. அந்த பத்திரிக்கையின் ஆசிரியருக்கு தலைக்கு வெளியில் ஒன்றும் கிடையாது. அவருடைய பதிவின் லோகோ "ஆந்தை". அவ்வப்போது "கிச்சடி" கிண்டுவார்.

நேரில் பழகுவதற்கும் இனிமையானவர்.ஆனால் சந்தித்த போதுதான் அவர் செய்யும் சேவைகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவருடைய இந்த சேவை மனப்பான்மையை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டுமாறு அவர் துணைவியாரும் வேண்டிக் கேட்டுக் கொண்டார்.அவர் செய்த சேவைகள் குறித்த வீடியோஇங்கே
------------------------------------------------------------------------------------
திராட்சை: